Wednesday, March 25, 2009

வெளிநாட்டில் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் ஈழத்துப் பெண்கள்

வெளிநாடுகளில் வேலை, நல்ல சம்பளம் என்ற இந்த இரு வார்த்தைகளை நம்பி இலங்கை மக்கள் எவ்வளவோ பேர் ஏமாற்றம் அடைந்து கண்ணீரும் கம்பலையு மாக தாய்நாடு திரும்பியுள்ள நிலையிலும் கூட இன்றைக்கும் ஏராளமான இளம் பெண்கள் இலங்கையிலிருந்து வெளிநாடுக ளுக்கு, குறிப்பாக சவூதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதை யாரும் சகித்துக் கொள்ள முடியாது. இதையெல் லாம் பார்க்கும் போது நமது இதயத்தை ஈட்டியாய் குத்துவது போன்ற பயங்கர உணர்வு ஏற்படுகிறது. வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்லப் படும் இலங்கை பெண்களுக்கு ஏற்படும் துயரம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. சொல்லி மாளாத அளவுக்கு அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம். வளைகுடா நாடுகள் என்று அழைக்கப் படும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு, இதர வேலைகளுக்காகச் செல்வோர், செய்தித்தாள் கள் மூலம் வெளியாகும் வேலைவாய்ப்பு விளம்பரங்களை பார்த்துத்தான் விண்ணப் பிக்கிறார்கள். ஆனால் வீட்டு வேலைக்காக செல்லும் இலங்கை இளம் பெண்களுக்கு இதுபோன்ற விளம்பரங்கள் எதுவும் வெளி யிடப்படுவதில்லை. காதும் காதும் வைத் தாற் போல ரகசிய முறையில் இந்த இளம் பெண்கள் தேர்வு (வியாபாரம்) நடத்தப் படுகிறது. வளைகுடா நாடுகளில் இருக்கும் வேலை வாங்கித் தரும் நிறுவனங்கள் இலங்கையில் தங்களுக்கென்று பல தரகு மனிதர்களை கமிஷன் அடிப்படையில் வாடிக்கையாகப் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். இந்தத் தரகு மனிதர்கள் இலங்கையில் உள்ள கிராமங்களுக்கு, குறிப்பாகத் தொலைதூர கிராமங்களுக்குச் சென்று அங்கு ஏழ்மையில் வாடும் குடும்பத்தினரை அடையாளம் காண்கிறார்கள். எந்தக் குடும்பத்தில் இளம் பெண்கள் இருக்கிறார்களோ அந்த குடும்பங் களுடன் நெருங்கிய நட்பு வைத்து முதலில் தங்களது ஆரம்ப கட்ட வேலையை ஆரம் பிக்கிறார்கள். வீடு வீடாகச் சென்று இப்படி வறுமையில் வாடும் கிராமத்து பெற்றோர்களிடம் ஆகைனவுகளை விதைத்து இளம்பெண்களின் சம்மதத்தையும் பெற்று விடுகிறார்கள். வறுமை, ஏழ்மை என்ற நிலை காரணமாக கிராம மக்கள் இத்தரகு மனிதர்களின் வலையில் வீழ்வது சுலபமாகிறது. இலங்கையின் பல்வேறு கிராமங்களிலி ருந்தும் இப்படி நூற்றுக்கணக்கில் திரட்டப் படும் பெண்கள் துணிமணிகளைக் கொண்ட ஒரு பையுடன் தரகு மனிதர்களின் பின்னால் கொழும்பு நகருக்கு ஆசைக்கனவுகளுடன் வந்து விடுகின்றனர். அங்கிருந்துதான் அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். பஸ், ரயில் என்று பல வழிகளில் அழைத்து வரப்படும் இந்த யாதும் அறியா யௌவனப் பெண்களைக் கொழும்பு நக?ல் உள்ள தங்கும் விடுதிகள் அல்லது சாலை யோர தங்கும் விடுதிகளில் தங்க வைக்கிறார் கள். குறுகலான அல்லது மிக மோசமான அறைகளில் அவர்களை அடைத்து வைத்து அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு தேவையான ஆவண தயா?ப்பு வேலை களைத் தரகு மனிதர்கள் செய்கின்றனர். விசா போன்ற ஆவணங்கள் கிடைத்த பிறகு அந்தப் பெண்களைக் கொழும்பில் வைத்தே மத்திய கிழக்கு நாடுகளின் ஆள் சேர்ப்பு ஏஜண்டுகளிடம் ஆடு, மாடுகளை விற்பது போல கமிஷன் தொகையை வாங்கிக்கொண்டு ஒப்படைத்து விடுகிறார் கள். இப்படி ஏஜண்டுகளிடம் சிக்கி கொண்ட உடனேயே இந்த பெண்களுக்கு கொடுமைகளும் ஆரம்பித்து விடுகின்றன. ஏஜண்டுகள் தங்களுடைய பணியாளர்கள் மூலமாக அந்தப் பெண்களை பல்வேறு மருத்துவ மையங்களில் மருத்துவ சோதனை என்ற பெயரில் கொடுமைப்படுத்த தொடங்கு கின்றனர். உடல் பரிசோதனை என்ற பெயர்களில் அந்த இளம்பெண்களின் ஆடைகள் முழுவதையும் களையச் சொல்லி அவமானப்படுத்துகிறார்கள். இப்படி மருத்துவ பரிசோதனை, ஆவண சேகரிப்பு, ஆகியவற்றுக்குப் பிறகு அவர்களுக்கு விசா கொடுக்கப்படுகிறது. இந்த வேலை கள் முடிந்ததும், அந்தப் பெண்கள் கால்நடைகளைப் போல விமானங் களில் ஏற்றப்பட்டு, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நகருக்கு அழைத் துச் செல்லப்படுகிறார்கள். அங்கு விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், அந்த பெண்களை ஆடுமாடுகளைப் பட்டியில் அடைத்து வைப்பதை போல இருட்டு அறைகளில் தங்க வைக்கப்படுகிறார்கள். இந்த பெண்கள் வேண்டும் என்று எவரெவர் கேட்டிருந்தனரோ அவர்களின் வரவுக்காக இந்த பெண்கள் ஒரு வார காலத்திற்கும் மேலாகக் கூட காத்திருக்க வேண்டிய மோச மான நிலையும் சில தருணங்களில் ஏற்படும். இந்தப் பெண்களை வீட்டு வேலைக்காக கேட்டிருந்த எஜமானர்கள் அவ்வளவு சிரத்தை எடுத்து வந்து அழைத்துச் செல்வதில்லை. அவர்கள் வரும் வரை இந்தப் பெண்கள் ஒரு குறிப்பிட்ட மனிதர்களின் காவலில் பசி, பட்டினியோடும் போதுமன உணவு தண்ணீர் இன்றி வாடுவ தோடு, அவர்களின் துன்புறுத்தலுக்கும் அவமானப்படும் நிலை உரியவர்களிடம் சேர்ப்பிக்கும் வரை இதே கதிதான். இப்படி தங்களது எஜமானர்களின் வீடுக ளுக்கு வேலை செய்யச் செல்லும் இந்தப் பெண்களுக்கு அவர்களது எஜமானர்களால் எவ்வளவு கொடுமைப்படுத்தப்படுகின்றார் கள் என்பதை இங்கே விவரிக்க தேவை யில்லை. பாலியல் ரீதியிலும் அவர்களுக்குத் தொல்லைகள் ஏற்படும். இத்தனை கொடு மைகளையும், அவமானங்களையும் தாங்கிக் கொண்டுதான் அந்தப் பெண்கள் தங்களது எஜமானர்களுக்கு வேலை செய்யவேண்டும். இதுபோன்று வீட்டுப் பணிப்பெண்க ளுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து உலகம் முழுவதும் ஏராளமான செய்தித் தாள்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இது மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமல்ல. அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் கூட இத்தகைய சம்பவங்கள் பல நடந் துள்ளன. இதற்காக தண்டனை பெற்ற வீட்டு எஜமானர்களும் உண்டு. அளவுக்கதிகமான கொடுமைகளைத் தாங்காத வெளிநாட்டு பெண்கள் தங்களது எஜமானர்களின் வீடுகளில் இருந்து எப்படி யாவது தப்பி மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தங்கள் நாட்டுத் தூதரகங்களை நோக்கி உதவிக்காக ஓடுவதுண்டு. இவர்கள் இப்படி தப்பிச் செல்லும்போது ஏதாவது ஒரு டாக்சியையோ அல்லது வாகனத்தையோ பிடித்துத்தான் செல்ல வேண்டும். அந்த வாகனங்களை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாட்டு டிரைவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுடைய வாகனங்களில் அழைத்துச் செல்லப்படும் பெண்கள், முதலில் அந்த டிரைவர்களின் வீடுகள் அல்லது அபார்ட் மெண்டுகளில் தான் அடைக்கலமாக வேண் டிய துரதிருஷ்டமான நிலை ஏற்படுகிறது. இந்த டிரைவர்கள் தங்களது செக்ஸ் ஆசைக்கு இந்த அப்பாவி பெண்களை பயன்படுத்தும் கொடுமையும் இயல்பாகவே நடைபெறும். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யவும் அவர்கள் தயங்குவதில்லை. எப்படியும் தாய்நாடு திரும்பி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வளவு கொடுமைகளையும் துன்பங்களையும் தாங்கிக்கொண்டு, இந்தபெண்கள் தங்கள் நாட்டு தூதரகத்திற்குச் சென்று, தங்களைத் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி கெஞ்சுகிறார்கள். இப்படி அபயம் தேடி வரும்பெண்களுக்காகவே மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தூதரங்களில் தனி இல்லம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு, அதற்குப் பிறகுதான் அவர்கள் தாய்நாட்டிற்கு திருப்பிஅனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்தத் தூதரக இல்லங்களிலும் கூட இந்த பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடை பெறுதுண்டு. இந்த இல்லத்திற்கு ஒரு பெண் வார்டர் இருப்பார். அந்தப்பெண் வார்டர் அபயம் தேடி வந்த பெண்களை அர்த்த ராத்திரியில் பேரம் பேசி கெட்ட வழியில் ஈடுபடுத்தி, பணம் சம்பாதிப்பதும் உண்டு. இவ்வளவு துன்பங்களையும் அனுபவித் து தாயகம் திரும்பும் பெண்களுக்கு தாய்நாட்டிலும் பல இடையூறுகள் காத்தி ருக்கின்றன. வேலை தேடி வெளிநாட்டுக்கு சென்ற பெண் அதற்குள் திரும்பி வந்துவிட் டாளே! என்று அவரது குடும்பத்தினரே அவளை வெறுக்கவும் செய்வார்கள். இத னால் அந்த பெண் செய்வதறியாது திகைக் கும் நிலையும் ஏற்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு கல்யாணம் ஆகாத இளம்பெண்கள் மட்டு மல்ல. திருமணமாகி குழந்தை கள் உள்ள பெண்களும் கூட பணத்திற்கு ஆசைப்பட்டு செல் வதுண்டு. இப்படிச் செல்லும் பெண்கள் தாங்கள் சம்பாதிக் கும் பணத்தை தங்களது கணவ ருக்கு மாதா மாதம் அனுப்பி வைப்பார்கள். தங்களது குழந்தைகள் படிக்க வேண்டும், தனது கணவர் நல்லபடியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பணம் அனுப்பி வைப்பார்கள். ஆனால் அவர் களின் கணவன்மார்களோ பெண்டாட்டி வெளிநாட்டில் வேலை செய்கிறாள், மாதா மாதம் பணம் வருகிறது என்ற நிலையில் ஆடம்பர வாழ்க்கையில் கண்மண் தெரியாமல் ஆடத் தொடங்கி விடுகிறார்கள். பெற்ற குழந்தைகளை கவனிக்காமல் குதூகல மான வாழ்க்கையில் இவர்கள் ஈடுபட்டு பணத்தை வீணாக செல வழிக்கத் தொடங்கி விடுகிறார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால், தனது மனைவி அனுப்பி வைக்கும் பணத்தில் இன்னொரு திருமணத்தை செய்து கொள்ளும் கணவன்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலை செய்யப் பெண்களை அனுப்பும் நாடுகளில் முதல் இடத்தில் இருப்பது இலங்கைதான். இங்கிருந்துதான் அதிகமான பெண்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மிகவும் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தப்படுகி றார்கள். இருந்தாலும் வறுமை காரணமாக வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் போய்க்கொண்டு தான் இருக்கிறார்கள். மத்திய கிழக்கு நகரங்களில் ஏற்கனவே வேலை பார்க்கும் பெண்கள் மூலம் மொபைல் போன் வழியாக புதிதாகப் பெண் களை அழைத்து வருவதற்கான பணிகளை இந்தகள்ளத் தனமான மாஃபியா கும்பல் செய்து வருகிறது. இதுபோன்ற மாஃபியா கும்பல்களிடம் சிக்கும் இளம் பெண்கள் படும்பாடு சொல்லி மாளாது. ஒப்பந்தம் முடிந்து திரும்பும் பெண்கள் இலங்கையிலேயே தங்களது குடும்பத்தின ருடன் தங்கி இருக்க விரும்பாமல் மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளுக்கே திரும்பிச் செல்லவும் விரும்புகின்றனர். ஏனென்றால் இங்கு இருக்கும் இறுக்கமான சூழ்நிலையும் குடும்பப் பிரச்சனைகளும்தான் பிரதான காரணம். அதனால் உள்ளூர் தரகர் முதல் வெளிநாடு ஏஜெண்டுகள் வரை பணம் சம்பாதிப்பதற்காக இப்பெண்களை மீண்டும் மீண்டும் இப்பகுதியில் தள்ள முயற்சிக்கிறார்கள். வெளிநாடுகளில் பெண்கள் வேலைக்கு சென்று கொடுமைகளுக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாவதைத் தடுக்கச் சில நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டு பெண்கள் வெளிநாடு செல்ல சில விதிமுறைகளை வகுத்து சட்டங்களைக் கடுமையாக்குகின்றன. ஆனால் இலங்கையில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை. இதனால் இந்த கள்ளத்தனமான ""பெண்கள் வர்த்தகம்'' தடைபடாமல் நடக்கிறது. இந்த அவலத்தை யும் கொடுமையையும் தடுக்க ஒரே வழி வெளிநாட்டு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களைத் தடுப்பதுதான். அதற்கான சட்டதிட்டங்களையும், விதி?றைகளையும் அரசாங்கம் தான் வகுக்கவேண்டும். இலங்கையில் ஏராளமான சமூக தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் உள்ளன. விமன் இன் நீட், சர்வோதயா, ஏ.சி.டபிள்யூ, பி.சி. போன்ற பல பெண்கள் அமைப்புகள் உள்ளன. இந்த பெண்கள் அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து, அரசாங்கத்தின் முன் வைத்து இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். பாகிஸ்தான், இந்தியா போன்ற ஏனைய தெற்காசிய நாடுகள் சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்குப் பெண்களை அனுப்புவதில்லை. இதே போல பிலிப்பைன்ஸ் நாடும் கூட இந்த விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இப்போது மிகவும் குறைவான சம்பளத்திற்கு வீட்டு வேலைக்குப் பெண்கள் எளிதில் கிடைப்பது இலங்கையில்தான். அதனால்தான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பணக்காரர்கள் தங்களது வீட்டு வேலைகளுக்கு இலங்கை இளம் பெண்களை இழுக்க முயற்சிக்கிறார்கள். இலங்கை பெண்கள் அனுபவிக்கும் இந்த இழிநிலையைப் போக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க ?ன் வர வேண்டும். இந்த ச?கத் தீமைக்கு ஒரு ?ற்றுப்புள்ளி வைத்து இலங்கை இளம் பெண்களைக் காக்க வேண்டும்

0 comments:

Post a Comment

சம்பவம் © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates