Wednesday, March 25, 2009

குவான்டனமோ சிறை என்பது.... (சமி அல்-ஹஜ் )

குவான்டனமோ சிறை என்பது அது ஆரம்பிக்கப்பட்ட காலம்தொடக்கம் சகல மனித உரிமை அமைப்புகளாலும்கண்டனத்துக்குள்ளாக்கப்பட்டு வருவது சகலரும் அறிந்ததே. இந்தநிலையில் இன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாகுவான்டனமோவை ஒரு வருடத்திற்குள் மூடுவதாகவும் அங்குள்ள சிறைக்கைதிகள் அமெரிக்க அரசின் கீழுள்ள ஏனைய கைதிகளைப் போலவேசட்டத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்றும் ஏனையசிறைக் கைதிகள் போலவே அடிப்படை மனித உரிமைகள் மீறப்படாத வகையில்நடத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்திருக்கின்றார். மேலும் அமெரிக்காவுக்குமாசு கற்பிக்கும் ஒரு சின்னமாக குவான்டமோ இருக்கின்றது என்றும்குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா குவான்டனமோ இராணுவத் தளத்தை நிபந்தனைகள் எதுவும் இன்றிகியூபாவுக்குத் திருப்பித் தந்துவிட வேண்டும் என்று பிடல் காஸ்ட்ரோஅமெரிக்காவிடம் கேட்டிருந்தார். ஓபாவின் குவான்டனமோ தொடர்பானபேச்சில் அவர் அங்குள்ள சிறையை ஒரு வருடத்திற்குள் மூடுவதாகத்தெரிவித்திருக்கின்றாரேயொழிய குவான்டனமோ கடற்படைத்தளத்தைப்பற்றியோ அங்கு நிலைகொண்டிருக்கும் கிட்டத்தட்ட 10000 இராணுவத்தினரைப்பற்றியோ ஒபாமா எந்தக் கதையுமே பேசவில்லை என்று பிடல் காஸ்டரோமேலும் குறிப்பிட்டிருந்தார்.
குவான்டனமோவில் உள்ள அமெரிக்காவின் கடற்படைத் தளத்தை மூடும்படிவெனிசுலா ஜனாதிபதி ஷவேஸ் உம் அமெரிக்காவுக்கு அறிவித்தல்விடுத்திருக்கிறார்.
----------------------------------------------------
சமி அல்-ஹஜ் எனப்படும் சமி மொஹ எல் டின் முகமெட் அல் ஹஜ் சூடான்நாட்டைச் சேர்ந்தவர். இவர் அல்யசீரா தொலைக்காட்சிச் சேவையின் கமராமேன்ஆக பணியாற்றிக் கொண்டிருக்கும்பொழுது அமெரிக்கப் படைகளினால்சிறைப்பிடிக்கப்பட்டு 6 வருடங்களுக்கும் மேலாகச் சிறை வைக்கப்பட்டிருந்தார். இவர் பாகிஸ்தானில் 15.12.2001 இல் கைது செய்யப்பட்டு பின்னர் குவான்ரனமோசிறைச்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் இவர் 2008ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி மேலும் இரண்டு சூடானைியகைதிகளுடன் விடுதலை செய்யப்பட்டார்.இவர் விடுதலை செய்யப்பட்ட பின் MEDIA சஞ்சிகைக்காக முதன்முதலில்பேட்டியளித்திருந்தார்.இவரைப் பேட்டி கண்டவர்கள்: காயிஸ் ஜெவார்ட் மற்றும் தொபேட் மெனார்ட்
---------------------------------------------------
கேள்வி: நீங்கள் பாகிஸ்தான் இராணுவத்தினால் 15.12.2001இல் எந்தச்சூழ்நிலகளில் கைது செய்யப்பட்டீர்கள்?
பதில் : நான் ஒரு அல்ஜீரிய பத்திரிகையாளருடன் பாகிஸ்தானில் இருந்தேன். ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் உள்ள கந்தஹர் நகரிற்கு, அதனுடையசரணடைவிற்குப் பின்னான அங்குள்ள நிலைமைகளைப் படம் பிடிப்பதற்காககச்செல்ல இருந்தோம். நாங்கள் ஷமானில் உள்ள எல்லைக் கடவைப் பகுதிக்குவந்தபோது, எங்களிடம் இருந்த கடவுச் சீட்டுகளைஎடுத்துக்கொண்டு எங்களைக் காத்திருக்கும்படிசொன்னார்கள். நாங்கள் எல்லோருமாகக்கிட்டத்தட்ட 70 பத்திரிகையாளர்கள்வரைஇருந்தோம். எங்களைத் தவிர மற்றவர்கள்அனைவரும் தங்கள் கடவுச்சீட்டுகளைத்மீளப்பெற்றுக் கொண்டார்கள். நாங்கள்எங்களுடைய கடவுச்சீட்டுகள்பற்றி அவர்களிடம் கேட்டபொழுது> சிலவிடயங்கள்பற்றி உறுதிப்படுத்தப்பட வேண்டி இருப்பதாக பதில் கிடைத்தது. எல்லைப்புறக் கடவையில் நின்றிருந்த பொலிஸாருக்கு என்னைத்தெரிந்திருந்தது. ஏனெனில் ஏற்கனவே இரண்டு தடவைகள் அதே எல்லையைக்கடந்திருக்கிறேன்.
கேள்வி: நீங்கள் அல்யசீராவுக்கு வேலை செய்வது அவர்களுக்குத்தெரிந்திருந்ததா?
பதில்: ஓம். அவர்களுக்குத் தெரியும். பாகிஸ்தான் பொலிஸார் எங்களிடம்இருந்து லஞ்சம் பெற்றுக் கொள்வதற்காகத்தான் இப்படி நடந்துகொள்கிறார்கள்என்று முதலில் நினைத்தோம். ஆனால்> பாகிஸ்தான் இராணுவத்திடம் இருந்துஎன்னைக் கைது செய்யும்படி தகவல்கள் வந்ததாக அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அங்கு என்னைப்பற்றித் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும்பொய்யானவையாக இருந்தன. கடவுச்சீட்டு இலக்கம் பிழை. என்னுடைய பிறந்ததேதியும் பிழையாக இருந்தது. என்னுடைய பெயரும்கூட. நான்ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானிற்குச் செல்ல இருப்பதாகஅனுமானிக்கப்பட்டேன். ஆனால் நான் பாகிஸ்தானில் இருந்துஆப்கானிஸ்தானுக்குச் செல்வதற்காக வந்திருந்தேன். இதெல்லாம் இருக்க, ஒருகிழமைக்கு முதல்தான் இஸ்லாமாபாத்தில் கட்டார் தூதுவராலயத்தினூடாகஎன்னுடைய கடவுச்சீட்டைப் புதுப்பித்திருந்தேன். நான் அல்யசீராவின்கமராமேன் என்றும் பல தடவைகள் இக் கடவையினூடாகச் சென்றிருப்பதாகவும்நான் அவர்களிடம் திருப்பித் திருப்பிச் சொன்னேன். அவர்கள் என்னைப்பொறுமை காக்கும்படி சொன்னார்கள்.
அல்யசீராவின் நிர்வாகி மொஹமட் யசீம் அல்-அலி நாங்கள் கந்தஹருக்கு வந்துசேர்ந்து விட்டோமா என்று தொலைபேசியில் அழைத்து விசாரித்தபோது, நாங்கள்எல்லைப்புறக் கடவையில் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளதைத் தெரிவித்தோம். அவர் உடனே கட்டார் தூதுவராலயத்தைத் தொடர்பு கொண்டபோது அவர்களும்இதில் நேரடியாகத் தலையிட்டார்கள். நான் அந்த இரவு முழுவதும் அங்குகாவலில் வைக்கப்பட்டேன். மறுநாள் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் மீண்டும்என்னுடைய பத்திரங்களைப் பரிசீலித்துவிட்டு ஒரு தப்பு நடந்துவிட்டதென்றும்நான் ஆப்கானிஸ்தானுக்குப் போகலாம் என்றும் கூறினார். ஆனால் என்னிடம்கடவுச்சீட்டை இன்னும் தரவில்லை. நான் இன்னும் ஒரு நாள் அங்குகாத்திருந்தேன். அதற்கும் மறுநாள் ஒரு உத்தியோகத்தர் அலுவலகத்திற்குதொலைபேசியில் தொடர்புகொண்டு நான் ஏற்கனவே அங்கு இரண்டு நாட்கள்தங்கிவிட்டதாகவும் விரைவில் என்னை அனுப்பவேண்டும் என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து என்னை ஷமானில் உள்ள ஒரு தடுப்புக்காவல்நிலையத்துக்கு இராணுவ புலன்விசாரணைக்குச் சொந்தமான ஒரு காரில் ஏற்றிச்சென்றனர். என்னைப் பற்றிய முழுமையான விசாரணை முடியும்வரை நான்அங்கு தடுப்புக் காவலில் இருந்தாகவேண்டும் என்ற செய்தியைத்தெரியப்படுத்தினார்கள்.
கேள்வி: நீண்ட நாட்களின் பின்பு நீங்கள் அமெரிக்க இராணுவத்திடம்கையளிக்கப்பட்டீர்கள்?
பதில்: ஷமானில் காவலில் வைக்கப்பட்ட மூன்றாவது நாள் கட்டார்தூதுவராலயத்தின் காரியதரிசி ஒருவர் என்னை வந்து பார்த்தார். பாகிஸ்தானின்இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் அவரிடம் தெரிவித்ததாவது, «சமி அல்-ஹஜ்இற்கு எதிராக எதுவும் எங்களிடம் இல்லை. நாங்கள் பார்த்துவிட்டு அவரைஅநேகமாக விடுதலை செய்து விடுவோம்». அந்த நேரத்தில் அவர்கள் நான் சமிஅல்-ஹஜ் தானா என்ற சந்தேகத்தில் இருந்தார்கள். தூதுவராலயத்தில் இருந்துவந்தவர் என்னைத் தனக்குத் தெரியும் என்பதற்கான ஆவணங்களை அவர்களிடம்சமர்ப்பித்தார். நான் டோஹவில் இருந்து வருகின்றேன் என்றும் அல்யசீராவின்கமராமேன் என்றும் சொன்னார். அதன்பின் மேலிடத்திற்கு அறிவித்து அங்கிருந்துஉத்தரவு வரும்வரையும் மேலும் மூன்று அல்லது நான்கு நாட்கள் என்னை அங்குதங்கும்படி சொன்னார்கள். இஸ்லாமாபாத்தில் விசாரித்ததில் என்னுடையகடவுச் சீட்டு போலியானதென்றும் சூடான் அரசாங்கத்துடன் தொடர்புகொண்டுஇதுபற்றிய மேலதிக தகவல்களைப் பெறவேண்டும் என்றும் சொன்னார்கள். எனவே நான் அந்த உறுதிப்படுத்தல் வரும்வரை காத்திருக்கவேண்டி இருந்தது.
ஜனவரிமாதம் 7ம் திகதி அன்று தாங்கள் என்னை சூடான் தூதுவராலயத்திற்குக்கொண்டுபோய்விடுவதாகவும் அங்கிருந்து நான் எனது நாட்டுக்குத் திரும்பிப்போக முடியுமென்றும் சொன்னார்கள்.அதற்கிடையில் என்னை கெற்றாவில் உள்ள இராணுவச் சிறைச்சாலைக்குமாற்றினார்கள். அன்று மாலையே என்னை சிறைக்கைதிகளுக்கான சீருடையைஅணியும்படி சொன்னார்கள். என்னிரு கைகளையும் முதுகுக்குப் பின்னால்கட்டினார்கள். அப்போதும் அல்யசீராவினுடைய கமரா என்னுடனேயே இருந்தது. என்னை விமான நிலையம்வரை கொண்டு சென்றார்கள். ஆனால் அங்கு என்னைஎனது நாட்டுக்கு அனுப்புவதை விட்டுவிட்டு அங்குள்ள அமெரிக்கர்களிடம்கைமாற்றினார்கள். அது நடந்தது ஒரு செவ்வாய்கிழமை இரவு பதினொன்றரைமணிக்கு.
கேள்வி: பிறகு?
பதில்: நான் பக்றாம் வரையில் விமானத்தில் பயணம் செய்தேன். அங்கு வைத்துஎன்னுடைய தலையை ஒரு பையினால் மூடினார்கள். விமானத்தில் இருந்துஇறங்கும்போது என்னைத் தள்ளினார்கள். எனக்கு எதையும் பார்க்க முடியாததால்நான் விழுந்ததில் எனது ஒரு கால் உடைந்தது. (இன்றைக்கு ஆறு வருடங்களின்பின்னரும் கைத்தடியின் உதவியுடன்தான் அவரால் நடக்க முடியும்) நிலத்தில்தள்ளி வீசி என்னை எல்லாருமாக உதைத்தார்கள். ஒரு அமெரிக்கஇராணுவத்தினன் கத்தினான்: «ஏன் எங்களுடன் சண்டைபோட இங்கு வந்தீர்கள். நீங்கள் தீவிரவாதிகள்». நான் அவர்களிடம் நுhறு தடவைகளுக்கு மேல் சொல்லிஇருப்பேன் « நான் ஒரு போராளியல்ல. ஒரு பத்திரிகையாளன்» என்று. ஒவ்வொரு தடவையும் அவர்கள் நீ யாருக்கு வேலை செய்கிறாய் என்றுகேட்டபொழுது அத்தனை தடவைகளும் அல்யசீரா என்று பதில் அளித்தேன்.மற்றவர்களை விட அதிகமாகவே என்னை அடித்தார்கள். எங்கள் தலைகள்இன்னும் மூடப்பட்டும் கைகள் பின்னால் கட்டப்பட்டும் இருந்தன. எங்களைச்சுற்றி நாய்கள் குரைத்தன. ஊளையிட்டன. அதன் பின்ஒவ்வொருவராக எங்களை ஒரு பெரிய கூடாரத்துக்குள்தள்ளினார்கள். பூச்சியம் சென்ரிகிரேட்டுக்கும் குறைந்தவெப்பநிலையாக இருந்திருக்க வேண்டும். தாங்கமுடியாதளவுகுளிராக இருந்தது. என்னுடைய இலக்கம் 35. அக்கூடாரத்தினுள் 3 மணித்தியாலங்கள் இருந்ததன் பின்னர்நான் மயக்கமடைந்து விழுந்துவிட்டேன். அவர்கள் என்னைஒரு அறைக்குள் கொண்டு சென்று என்னைநிர்வாணமாக்கினார்கள். பின்பு எனக்கு ஒரு புதிய யூனிபோர்ம்அணிவித்தார்கள். அப்போதுதான் ஒசாமா பின்லேடனின்கமராமேன் என்று என்னைக் குற்றம் சாட்டினார்கள். நான் ஒருபோதும் ஒசாமாபின்லேடனைப் படம் எடுக்கவில்லை என்று நான் அவர்களிடம் கூறினேன். அந்தக் கூடாரத்தினுள் மலசலகூடமோ தண்ணீரோ இல்லை. சாப்பிடுவதற்குமிகச் சொற்பமாக ஏதும் தந்தார்கள். அங்கு தொழுகைக்கு உரிமையில்லை. கூடாரத்தினுள் இருந்த ஈரலிப்புத் தன்மையினால் எனது கால்கள்வீங்கிப்போயின. இரண்டு கிழமைகளிற்குப் பிறகு விசாரணைகள் தொடங்கின. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் போரின் ஆரம்ப காலகட்டத்தில் நான்பின்லேடனைப் படம் பிடித்தேன் என்று தொடர்ந்தும் குற்றம் சாட்டினார்கள். அவர்கள் என்னைக் கைது செய்ததற்கு முக்கிய காரணமாக அதைத்தான்கூறினார்கள்.நான் யுத்தம் தொடங்கியபோதும் அதற்குப் பின் சில மாதங்களும் டோஹவில்தங்கி இருந்தேன் என்பதை நிறுவுவதற்கு எனது கடவுச்சீட்டைக் காண்பித்தேன். எனவே நான் பின்லேடனைப் படம் பிடித்திருக்க வாய்ப்பில்லை என்றுசொன்னேன். அல்யசீராவில் ஒளிபரப்பப்பட்ட பின்லேடனின் நேர்காணல் தய்சீர்அலுவானியினால்தான் எடுக்கப்பட்டது. நான் அவருடைய கமராமேன் ஆகவும்இருக்கவில்லை. அப்போது நான் கந்த£hரில் சிஎன்என் யூனிற்றுடன் இருந்தேன். நீ ஒரு நாளும் பின்லேடனைப் பார்த்ததில்லையா என்று கேட்டு அவர்கள்என்னைப் பலவந்தப்படுத்தினார்கள். நான் ஒருபோதும் பார்த்ததில்லை என்றுபதிலளித்தேன்.
கேள்வி: பின்லாடனைப் படம்பிடித்ததென்பது மட்டும்தானா அவர்கள்உங்கள்மீது வைத்த குற்றச்சாட்டு?
பதில் : அவர்கள் என்னிடம் இன்னொரு கேள்வியையும் கேட்டார்கள். செப்டெம்பர் 11ம் திகதி நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்று. நான் சிரியாவில்என்குடும்பத்துடன் இருந்தேன். கடவுச்சீட்டில் இருந்த விசா அதற்குச் சாட்சி. நான்டமாஸில் இருந்தேன் எனபதை அவர்கள் ஏற்கனவே தெரிந்து வைத்தேஇருந்தார்கள். நாங்கள் உங்களை இப்போது விடுதலை செய்தால் நீங்கள் என்னசெய்வீர்கள் என்று ஒரு உத்தியோகத்தர் என்னிடம் கேட்டார். «இங்கு என்னநடந்தது என்பதையும் என்னை எப்படி அடித்துத் துன்புறுத்தினீர்கள் என்பதையும்சொல்வேன்» என்று பதிலளித்தேன். தன்னிடம் இருந்து ஏதாவது உதவி எனக்குத்தேவையா என்று அவர் மேலும் கேட்டார். நான் எனது குடும்பத்தினருடன்தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் எனக்கு மருத்துவ உதவியும் ஒருபோர்வையும் தேவை என்று சொன்னேன். அவர் என்னிடம் செஞ்சிலுவைச்சங்கத்தின் படிவம் ஒன்றைக் கொடுத்தார். நான் அதில் என்னுடைய டோ£h விலாசத்தை மட்டும் குறிப்பிட்டேன். நான் தடுப்புக் காவலில்வைக்கப்பட்டிருக்கும் இடத்தை எனது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தும்பொறுப்பை அவர் எடுத்துக் கொண்டார். அந்தப் படிவத்தில் நான் எனதுவிலாசத்தைத் தவிர ஒரு சொல்கூட மேலதிகமாக எழுதமுடியாது. அவர்எனக்கான மருத்துவ உதவிக்கு ஒருவரைத் தேடித் தருவதாகவும் சொன்னார்.
கேள்வி: உங்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டதா?
பதில்: இல்லை. ஒருவரும் எனக்கு மருத்துவ உதவி வழங்கவில்லை. ஒருபோதும் இல்லை. எனக்கு ஒரு போர்வை தந்தார்கள். தொழுகை என்பதுகேள்விக்கு அப்பாற்பட்ட விடயமாகக் கருதப்பட்டது.
கேள்வி: நீங்கள் கந்த£hர் சிறையில் 5 மாதகாலம் இருந்திருக்கிறீர்கள். அங்குஇதைவிடப் பரவாயில்லாமல் உங்களைக் கவனித்தார்களா?
பதில்: கந்தஹரில் இருந்து வரும் வழியில் எங்களை மீண்டும் உதைத்தார்கள். எங்களை இழிசொற்களால் திட்டினார்கள். எங்கள் தாய்மாரையும்சகோதரிகளையும் அவமதித்துப் பேசினார்கள். நாங்கள் வந்து சேர்ந்ததும்எங்களை விசாரணைக்குட்படுத்தினார்கள். தொடர்ந்தும் தொடர்ந்தும் ஒரேகுற்றச்சாட்டு. என்னுடைய வாழ்க்கைபற்றித் தங்களிடம் பேசும்படிசொன்னார்கள். நானும் சொன்னேன். என்னை விசாரித்த உத்தியோகத்தர் சிலநாட்களின் பின்னர் என்னிடம் வந்து சொன்னார்: «நாங்கள் இப்போது போரில்இருக்கிறோம். போர்க்காலத்தில் இருக்கிறோம். நாங்கள் தவறுகள்இழைக்கலாம். இதெல்லாம் பாகிஸ்தானியர்களால்தான். அவர்கள்தான்உங்களைக் கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் காசுக்காகத்தான் இதைச்செய்தார்கள். நாங்கள் உங்களை விடுதலை செய்து உங்கள் நாட்டிற்குத் திருப்பிஅனுப்ப இருக்கிறோம். நடந்த தவறுக்காக நாங்கள் மிகவும் மனம்வருந்துகிறோம். நாங்கள் தவறுதலாக உங்களைக் கைது செய்ததற்காகவும்சிறை வைத்திருந்ததற்காகவும் மன்னிப்புக் கோரி அல்யசீராவுக்கும் கடிதம்எழுதுகிறோம். ஆனால் இந்தக் கடித சமாச்சாரத்தை வெளியே கொண்டு வராமல்இருப்பது உங்களுடைய பொறுப்பு. மற்றும் இந்தக் கைது பற்றியோ சிறைவாசம்பற்றியோ நீங்கள் எதுவும் பேசக்கூடாது. அப்படி ஏதும் நடந்தால் நீங்கள் மீண்டும்கைது செய்யப்படுவீர்கள். «இறுதியில் அவர்கள் என்னைத் தங்களுடன் சேர்ந்து வேலை செய்யும்படியும், அப்படி ஒரு முடிவெடுத்தால் அதற்காக நான் எப்போதாவது வருந்தும்படிஇருக்காது என்றும் சொன்னார்கள். என்னுடைய வேலை என்னவென்றால்ஏனைய கைதிகளை உளவு பார்ப்பது. நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, என்னிடம் டோஹவுக்குச் செல்வதற்கான பயணச்சீட்டு இருப்பதாகவும் என்னைவெளியே போக அனுமதிக்கும்படியும் கேட்டுக் கொண்டேன். அவர்கள் அதைத்தொடர்ந்து 5 மாதங்கள் எவ்விதமான பதிலும் தராது இருந்தார்கள். பிறகு ஒருநாள் வந்து, நான் கந்தஹரை விட்டு வெளியேறப் போகிறேன் என்றும், கியூபாவில் உள்ள குவான்டனமோ சிறைக்கு மாற்றப்படுகிறேன் என்றும்சொன்னார்கள். எந்தவிதமான விளக்கங்களும் அவர்களிடம்இருந்திருக்கவில்லை.
கேள்வி: நீங்கள் குவான்டனமோவுக்கு 2002ம் ஆண்டு யூன்மாதம் 16ம் திகதிவருகிறீர்கள். அங்கு 2008ம் ஆண்டு யூன் மாதம் வரையும் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் மறியலில் இருந்தபோது அவர்கள் உங்களை எப்படி நடத்தினார்கள்?
பதில்: எங்களுடைய பயணத்தின்போது நாங்கள் நித்திரை கொள்வதற்கு அனுமதிகிடைக்கவில்லை. எந்த நேரத்திலும் கண்களை மூடாதிருக்கநிர்ப்பந்திக்கப்பட்டோம். அங்கு வந்து சேர்ந்த உடனேயே 3 மணித்தியாலங்களாகநான் விசாரிக்கப்பட்டேன். நான் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் எதைச்சொன்னேனோ அதையே திருப்பித் திருப்பிச் சொன்னேன். மூன்று நாட்கள்கழித்து என்னை மீண்டும் விசாரணைக்கு அழைத்தார்கள். விசாரிப்பதற்கு மூன்றுபேர் வந்திருந்தார்கள். அவர்களில் ஒரு இராணுவ அதிகாரியும்> ஒரு கு.டீ.ஐ. உத்தியோகத்தரும் அடங்குவர். அவர்கள் விசாரித்ததில் எனக்கு எதிராக எந்தப்பிரச்சினையும் இல்லை என்றும் என்மீது எந்தக் குற்றச் சாட்டுகளையும் தாங்கள்இப்போது வைக்கவில்லை என்றும் விளக்கங்கள் தந்தார்கள். நான்பொறுமையாக இருந்தால் விடுதலை செய்யப்படுபவர்களில் முதலாவதாக நான்இருப்பேன் என்று சொன்னார்கள். பிறகு இன்னொரு நாளில் அல்யசீராவைப்பற்றி விசாரிப்பதற்கு அழைத்தார்கள்.
கேள்வி: உங்களிடம் என்ன கேட்டார்கள்?
பதில்: அல்யசீராவின் நிர்வாகக் கட்டமைப்பு குறித்து என்னிடம் ஏராளமானகேள்விகள் கேட்டார்கள். நிர்வாகிகள் பற்றியும் உள் விவகாரங்கள் குறித்தும்கேட்டார்கள். மேலும் அல்யசீராவுக்கு எங்கிருந்து நிதியுதவி கிடைக்கின்றதென்றுகேட்டார்கள். நான் அங்கு ஒரு கமராமேனாக மட்டுமே வேலை பார்த்தேன்என்பதைத் திரும்பத் திரும்ப அவர்களிடம் சொன்னேன். நான் அதன்உள்விவகாரம் பற்றியோ நிர்வாகங்கள் பற்றியோ எதுவும் அறிந்திருக்க முடியாதுஎன்று சொன்னேன். ஆனால் அவர்களோ அல்யசீராவின் நிர்வாகி பற்றியும்அங்குள்ள பத்திரிகையாளர் ஒருவர் பற்றியும் விபரங்களைக் கூறும்படி என்னைவற்புறுத்தினார்கள்;. அல்யசீராவுக்கும் அல்கைதாவுக்கும் இடையில்என்னவிதமான தொடர்புகள்> உறவுகள் இருக்கின்றன என்பது பற்றிச்சொல்லும்படி கேட்டார்கள்;. அல்கைதாவின் ஒளிப்படங்கள் எப்படிஅல்யசீராவுக்கு வந்து சேர்கின்றன? அவர்களிடம் இருந்து அவ் ஒளிப்பதிவுப்பேழைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அல்கைதாவுக்கு இத்தொலைக் காட்சிநிறுவனம் காசு கொடுக்கின்றதா? அல்லது அல்கைதா தங்களுடையவிளம்பரத்துக்காக அல்யசீராவுக்கு பணம் கொடுக்கின்றதா? என்றும்கேட்டார்கள். எனக்கு உண்மையாக இவைகள் எதுபற்றியும் ஒன்றும் தெரியாது. கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக அவர்கள் இதே கேள்விகளையே தொடர்ந்துகேட்டுக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட 120 விசாரணைகள். இதில் 90 வீதமும்அல்யசீரா பற்றியதாக இருந்தது. நான் அல்யசீராவின் கமராமேனாகசெச்செனியாவில் வேலை செய்தபோது நான் என்ன செய்தேன் என்பது பற்றிவிபரமாக அறியவேண்டும் என்று சொன்னார்கள். அதைத் தொடர்ந்து நான்தங்களுடன் சேர்ந்து வேலை செய்தால் எனக்கும் எனது குடும்பத்துக்கும்அமெரிக்கப் பிரஜா உரிமை தருவதாகச் சொன்னார்கள். நான் அவர்களுக்குஎடுத்து வரும் செய்தித் தரவுகளைப் பொறுத்து என்னுடைய சம்பளம் அமையும்என்றும் சொன்னார்கள்.
கேள்வி: அதாவது அல்யசீராவுக்கு வேலை செய்துகொண்டே?
பதில்: ஓமோம். நான் தொடர்ந்தும் அல்யசீராவில் கமராமேனாகஇருக்கவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இந்தத்தகவல்கள் சேகரிப்புப் பற்றி பயிற்சியளிப்பதற்கு மிகவும் விருப்பமாகஇருந்தார்கள். அதாவது அல்யசீராவுக்கும் அல்கைதாவுக்கும் இடையிலானதொடர்புபற்றி என்னவிதமான தகவல்களைப் பெற்றுக் கொள்வது மற்றும்என்னவிதமான விடயங்கள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றதுஎன்பதுபற்றியெல்லாம். அத்துடன் கடாபியுடனான ஒரு பேட்டிக்கு நான்ஒழுங்குகள் செய்து தரவேண்டும் என்றும் கேட்டார்கள். அங்கு நடக்கும்உரையாடல்களைப்பற்றி எதுவும் தொலைபேசியில் இவர்களுக்குச்சொல்லாமலே பதிவுசெய்துகாள்வதற்கான எலெக்ட்ரோனிக் உபகரணங்கள்எல்லாவற்றையும் தாங்கள் வழங்குவதாகச் சொன்னார்கள். மற்றும்எங்கேயாவது ஒரு தீவிரவாதி இருப்பதாக சிறியதொரு சந்தேகம் இருந்தாலும்தங்களுக்கு உடனேயே தகவல் தந்தால் தாங்கள் உடனடியாகவே அதற்குரியநடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சொன்னார்கள். இவைகள்எல்லாவற்றிற்கும் நான் சம்மதித்தால் உடனேயே விடுதலை செய்யப்படுவேன்என்று சொன்னார்கள். நான் இதுபற்றி யோசிப்பதற்கு சிறிது கால அவகாசம்தரும்படி அவர்களிடம் கேட்டேன். இந்த இடைநடுவில் எனக்கு ஒரு அரேபியபத்திரிகையுடன் தொடர்பு கிடைத்தது. இது குவான்டனமோ வந்து கிட்டத்தட்ட 10 மாதங்களின்பின்.
கேள்வி: இந்த விசாரணைகள் இன்னும் நீண்ட காலம் நீடித்ததா? அல்யசீராவுடன்உங்களுக்குத் தொடர்பு இருக்கின்றதென்பதைத் தவிர வேறேதாவதுகுற்றச்சாட்டுகளை உங்கள்மீது வைத்தார்களா?
பதில்: நான் நன்கு யோசித்த பின்பு அவர்களிடம் சொன்னேன். நான் எனதுகுடும்பத்தை நினைத்துப் பயப்படுகின்றேன். நீங்கள் என்னைக் கேட்டவற்றைச்செய்வதற்கு என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. என்னுடைய இந்தப் பதிலிற்குப்பிறகு அவர்களுடைய அணுகுமுறைகள் மாற்றம் கண்டது. அதற்குப் பின்புஎனக்கு அல்கைதாவுடன் தொடர்பிருப்பதாகவும் அல்கைதா உறுப்பினர்களின்பேட்டிகளை நான் படப்பிடிப்பு செய்ததாகவும் என்மீது குற்றம் சுமத்தினார்கள். அல்கைதாவின் மூன்றாவது தலைவரை நான் படம் பிடித்தது அவர்களுக்குத்தெரிந்திருந்தது. அந்தப் பேட்டியைச் செய்தவர் யூசுப் அல் ஷீரி. நான் படம்பிடித்ததை அல்யசீராவுக்கு அனுப்பினோம். அதனை அல்யசீரா ஒளிபரப்பியது. அதற்கான ஒளிபரப்பு உரிமையை சி.என். என். வாங்கிக் கொண்டது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எனக்கு இந்த அல்கைதா தலைவருடன்தொடர்பிருப்பதாக அமெரிக்கர்கள் சொன்னார்கள். எனக்கு அவரைத் தெரியாது. நான் அவரைப் படம்பிடித்தது மட்டும்தான். நான் அஸேர்பஜ்ஜானிலும் வேலைசெய்ததாக அவர்களிடம் சொன்னேன். அவர்கள் என்னைப்பற்றி மேலும்விசாரித்ததில் நான் ஒரு முறை விமானநிலையத்தில் 200 000 டொலர்கள்பணத்துடன் பிடிபட்டதைச் சொன்னார்கள். அது உண்மை. ஆனால் அது 200 000 டொலர்கள் அல்ல. 220 000 டொலர்கள். இது ஒரு அமைப்பினால்உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட பணமாகும். அதுஒரு முதலாளிக்குச் சொந்தமான பணம். அதில் ஒரு பகுதி பொதுநல சேவைவேலைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
கேள்வி: அதற்குப் பிறகு விசாரணைகள் குறைந்ததா?
பதில்: விசாரணைகள் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் தொடர்ந்தன. ஆனால்ம் ஆண்டுதான் அவர்கள் எனக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாகக்குற்றம் சுமத்தினார்கள்;. இடைப்பட்ட காலங்களில் நான் தங்களுடன் சேர்ந்துவேலைசெய்ய வேண்டும் என்பதற்காக சகல முயற்சிகளிலும் ஈடுபட்டார்கள். 2005
கேள்வி: அங்கு நீங்கள் மோசமாக நடத்தப்பட்டதையடுத்து அதனை எதிர்த்துஉண்ணாவிரதம் இருந்தீர்கள்?
பதில்: நாங்கள் எங்களுடைய குடும்பங்களைத் தொடர்புகொள்ளமுடியாதிருந்தது. எங்களைத் தொழுகை செய்வதற்கு அவர்கள்அனுமதிக்கவில்லை. எனக்கு முன்னாலேயே குர்ஆனைக் கிழித்த துண்டுகளைமலசலகூடக் குழியினுள் வீசி எறிந்தார்கள்.
கேள்வி: நீங்கள் அதைப் பார்த்தீர்களா?
பதில்: ஓம். அவர்கள் எனக்கு முன்னால்தான் அதைச் செய்தார்கள். அவர்கள்குர்ஆனை மிகமோசமாக அவமதித்தார்கள். குர்ஆனை நிலத்தில் போட்டுஅதன்மேல் ஏறி மிதித்து வசைபாடினார்கள்.
கேள்வி: உடல்ரீதியாக இம்சைக்குட்படுத்தப்பட்டீர்களா?
பதில்: நான் உதைக்கப்பட்டேன். மோசமாக நடத்தப்பட்டேன். என்னுடையகைகளையும் கால்களையும் இறுகக்கட்டியபின் படிக்கட்டுகளில்உருட்டிவிட்டார்கள். நல்லவேளையாக நான் எதிலும் அடிபடாமல் தப்பினேன். என்னுடைய தலையைத் தரையில் அறைந்தார்கள். என்னுடைய மேல்புருவத்தினடியில் வெடித்தது. இவையெல்லாம் நான் 2002இல் வந்தபோதுநடந்தவை.
கேள்வி: இதைவிட வேறு சித்திரவதைகளுக்கு உட்பட்டீர்களா?
பதில்: நாங்கள் அசையமுடியாதபடிக்கு எங்களைக் கட்டிப்போட்டார்கள். முழங்காலில் பல மணித்தியாலங்கள் வெறும் நிலத்தில் இருக்கச் செய்தார்கள். இது மிகக் கடினமான விடயம். எங்களை நித்திரை கொள்ளவிடாமல்தொல்லைகள் தந்தார்கள்.
கேள்வி: எப்போதாவது இந்த விசாரணைகளும் சித்திரவதைகளும்நிறுத்தப்பட்டதா? ஓய்வுக்கு வந்ததா?
பதில்: ஒன்றரை வருடங்களின் பின்பு. நான் எதுவுமே பேசுவதில்லை என்றுமுடிவெடுத்த பின்பு. அவர்கள் எங்களைக் கடும்குளிர் நிறைந்த அறையினுள்நீண்ட நெடுநேரம் வைத்திருந்தபோதும் நான் தொடர்ந்து மெளனம் காத்தேன்.
கேள்வி: ஆனால் நீங்கள் 2008ம் ஆண்டு வரையில் சிறையில்இருந்திருக்கிறீர்கள். உங்களுடைய சிறையில் இருந்த வசதிகளில் ஏதாவதுமுன்னேற்றம் காணப்பட்டதா?
பதில்: நான் வெவ்வேறு காம்ப்களிற்கு மாற்றப்பட்டேன். பல தடவைகள். 2007ம்ஆண்டு ஜனவரி 7ம் திகதி நான் உண்ணாவிரதத்தைத் தொடங்கினேன். மூன்றுதடவைகள் உண்ணாவிரதம் இருந்தேன். ஒவ்வொரு தடவையும் உண்ணாவிரதம்ஆரம்பித்தபோது நாங்கள் தங்களுடைய விதிமுறைகளை மீறுவதாகச்சொன்னார்கள். அந்த வேளையில் அவர்கள் எங்களுக்கு சவர்க்காரம், பல்துலக்கும் பிரஷ், படுக்கும் மெத்தை எதையும் தர மறுத்தார்கள்.
கேள்வி: நீங்கள் உண்ணாவிரதம் இருந்தபோது உங்களை உணவுண்ணுவதற்குநிர்ப்பந்தப்படுத்தினார்களா?
பதில்: ஓம். எங்களை ஒரு கதிரையில் கட்டி> வாயைத் திறக்கச் செய்துசாப்பாட்டைத் திணித்தார்கள். நாங்கள் இதற்கு ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில்எங்கள் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்கும் ஒரு திரவத்தைஉபயோகித்தார்கள். வைத்தியர்கள்கூட எங்களைத் துன்புறுத்தினார்கள். சித்திரவதை செய்தார்கள்.
கேள்வி: நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?
பதில்: அவர்கள் எங்களுடைய மூக்கினுள் ஒரு நீளமான கோலைச்செலுத்தினார்கள். வாயினுள் செலுத்துவதற்குப் பதிலாக. அது அதிகவேதனையை ஏற்படுத்துவதற்காக.
கேள்வி: நீங்கள் விடுதலை செய்யப்பட்டபோது எந்தக் காம்ப்இல் இருந்தீர்கள்?
பதில்: காம்ப் நம்பர் 1. டெல்டா காம்ப்.
கேள்வி: நீங்கள் வெள்ளையுடை அணிந்திருந்தீர்களா?
பதில்: இல்லை. ஒறேஞ் கலர்தான். எங்களுடைய விடுதலைவரை அந்தக்கலரில்தான் சீருடை அணிந்திருந்தேன். ஓரிரு தடவைகள் வெள்ளைச் சீருடைஅணிந்திருக்கிறேன். இது இந்த உண்ணாவிரதத்திற்கு முன்.
கேள்வி: உங்களுடைய இவ்வளவு வருடகால சிறைவாசத்தின் பின்> நீங்கள்என்ன காரணத்திற்காகச் சிறை வைக்கப்பட்டிருந்ததாக எண்ணுகிறீர்கள்?
பதில்: அல்யசீராவுக்காகத்தான்.
கேள்வி: நீங்கள் உங்கள் எடையில் 18 கிலோ குறைந்திருக்கிறீர்கள்?
பதில்: என்னைக் கைது செய்தபோது நான் 110 கிலோவாக இருந்தேன். உண்ணாவிரதங்களின் பின் 68 கிலோ. இப்போது 80 கிலோ.
-------------------------------------------------------
குவான்டனமோ சிறை பல்வேறு காம்ப்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. டெல்டா
2. இகுவானா
3. எக்ஸ்ரே.
29.04.2002இல் எக்ஸ்ரே காம்ப் மூடப்பட்டது. டெல்டா காம்ப் ஆறு பிரிவுகளாகப்பிரிக்கப்பட்டது. கைதிகளுடைய ஒத்துழைப்பைப் பொறுத்து அவர்களுக்கானபிரிவுகள் தெரிவுசெய்யப்பட்டன.
அங்குள்ள கைதிகளில் மிகப்பயங்கரமானவர்கள் என்று கருதப்பட்டவர்களுக்குஒறேஞ் கலர் யூனிபோர்ம். ஏனையோர்களுக்கு வெள்ளை யூனிபோர்ம்.
குவான்டனமோ சிறை என்பது அது ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் சகலமனித உரிமை அமைப்புகளாலும் கண்டனத்துக்குள்ளாக்கப்பட்டு வருவதுசகலரும் அறிந்ததே. இந்த நிலையில் இன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாகுவான்டனமோவை ஒரு வருடத்திற்குள் மூடுவதாகவும் அங்குள்ள சிறைக்கைதிகள் அமெரிக்க அரசின் கீழுள்ள ஏனைய கைதிகளைப் போலவேசட்டத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்றும் ஏனையசிறைக் கைதிகள் போலவே அடிப்படை மனித உரிமைகள் மீறப்படாத வகையில்நடத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்திருக்கின்றார். அமெரிக்க அரசுக்கு மாசுகற்பிக்கும் ஒரு சின்னமாக குவான்டமோ இருக்கின்றது என்றும்குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், கியூபா தனது இராணுவத் தளத்தை அங்கு வைத்திருப்பது குறித்துதொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்திருக்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment

சம்பவம் © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates