Friday, March 27, 2009

மகளை மணந்த தந்தை

_44249940_india_jalpaiguri_map203.gif


தனது சொந்த மகளையே அவளுடைய பதினைந்தாவது வயதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அலி என்பவர் திருமணம் செய்திருக்கிறார்.

அந்த திருமணத்திற்கு அவர் சொன்ன காரணம் “கடவுளின் கட்டளை”. அல்லா சொல்லிவிட்டார் என்று தன்னுடைய மனைவியிடம் சொல்லி திருமணம் செய்து கொள்ள அனுமதியும் வாங்கியிருக்கிறார் அவர்.

இந்த விஷயம் நடந்து ஐந்தாறு மாதங்களாகியிருக்கின்றன. இப்போது அந்தப் பெண் தன்னுடைய தந்தையால் தாயாகியிருக்கிறாள்.

இந்த விஷயம் கேள்விப்பட்ட கிராமத்தினர் கொதித்துப் போயிருக்கின்றனர். அந்த கோபம் கொலையாக மாறும் முன் காவல் துறையினர் அலியையும், அவர் மனைவியையும் காப்பாற்றியிருக்கின்றனர்.

இவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து இவர்களை விடுதலை செய்து “நீதியை” நிலைநாட்டியிருக்கிறது நீதி மன்றம். குறைந்த பட்சம் ஒரு மைனர் பெண்ணை திருமணம் செய்த குற்றத்துக்காகவேனும் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பது கிராமத்து மக்களின் கோரிக்கை.

கோபக் கிராமத்தினருக்குப் பயந்து கணவனும் மனைவியும் தலைமறைவாகியிருக்கின்றனர் இப்போது.

கடவுளுக்கு ஒரு விண்ணப்பம்: இப்படி தேவையற்ற திருமணங்களைச் செய்யச் சொல்லி உங்கள் பக்தர்களை வற்புறுத்தாதீர்கள்.

மனிதர்களுக்கு ஒரு விண்ணப்பம் : கடவுளிடம் எதையும் எழுத்து மூலம் வாங்கிக் கொண்டு செயல்படுங்கள். சட்டம் ஆதாரங்களை எதிர்பார்க்கும்.

0 comments:

Post a Comment

சம்பவம் © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates