Wednesday, March 25, 2009

14வயது சிறுமியை சிதைத்த 15 மனித மிருகங்கள்!கிருத்தவ மதபோதகரும் உடந்தையா?

கிருத்தவ தேவாலயத்தில் தங்கிப் படிப்பதற்காக அனுப்பி வைக்கப் பட்ட 14 வயது சிறுமியை 15 வாலிபர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. வறுமையின் காரணமாக உணவுக்கே போராடி வந்த ஏழை நெசவாளித் தொழிலாளி சுந்தர் ராஜன். அவரது இரண்டு மகள்களான நாகநந்தினி மற்றும் கிருத்திகா ஆகியோருடன் ஈரோடு மாவட்டம் குமாரபாளையம் என்ற ஊரில் வசித்து வந்தார். சுந்தர் ராஜனின் மூத்த பெண்ணான நாகநந்தினி நன்றாகப் படித்துக் கலெக்டர் ஆகும் கனவுடன் இருந்துள்ளார். குழந்தைகளின் சாப்பாட்டிற்கே வழி செய்ய முடியாத தன்னால் எப்படி மகளைக் கலெக்டர் ஆக்க முடியும் என்று தனது விதியை எண்ணி நினைத்து நொந்தபடி இருந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியின் கிருத்துவ மத போதகர்கள் சிலர் கிருத்துவத்தில் இணைந்தால் உங்கள் பிள்ளைகள் கிருத்துவ தேவாலயத்திலேயே தங்கிக் கொள்ளவும், அவர்கள் விரும்பும் படிப்பினைப் படிக்கவும் வழி செய்வதாகவும் கூறி உள்ளனர். எப்படியோ தனது பிள்ளைகளின் எதிர்காலப் படிப்பிற்கு நல்ல வழி கிடைக்கிறதே என்றும், தனது குடும்ப வறுமை நீங்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் எண்ணிய அந்த ஏழை நெசவாளியும் தனது குடும்பத்துடன் கிருத்துவ மதத்தில் இணைந்து உள்ளார். கிருத்தவ மத போதகர்கள் சுந்தர ராஜனிடம் அவரது இரண்டு மகள்களும் அந்தப் பகுதியில் உள்ள சீயோன் பூரண சுவிசேசத் திருச்சபையில் தங்கிக் கொண்டு அங்கேயே வேலை பார்த்துக் கொண்டு அப்படியே படித்துக் கொள்ளலாம் என்று கூறி உள்ளனர். தேவாலயத்திலேயே தங்கிப் படிக்கும் வாய்ப்பு தனது பிள்ளைகளுக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்த சுந்தரராஜனும் அந்த மதபோதகர்கள் கூறியபடியே தனது மகள்களை அந்தத் தேவாலயத்தில் உள்ள போதகர் தேவசகயத்தின் பொறுப்பில் விட்டு விட்டு வந்துள்ளார். திடீரென ஒரு நாள் தனது மூத்த மகள் நாக நந்தினி உடல் நலம் இன்றி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக வந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்து போய் மருத்துவமனைக்கு ஓடோடிச் சென்ற சுந்தர ராஜனுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவமனைப் படுக்கையில் நாய்கள் குதறிப் போட்டபழைய கந்தல் துணியைப் போல குற்றுயிரும், குலை உயிருமாகக் கிடந்தாள் நாகநந்தினி. தேவாலயத்தில் பாதுகாப்பாகத் தங்கிப் படித்துக் கலெக்டராகப் போகிறாள் என்று தான் கனவு கண்டு கொண்டிருக்கும் தனது மகளின் கோர நிலையைக் கண்டு துடித்தார் சுந்தர ராஜன். சுந்தரராஜனால் தேவாலயத்தில் விட்டு விட்டு வரப்பட்ட நாகநந்தினி அங்கிருந்து அவரது தகப்பனுக்கே எந்தத் தகவலும் தெரிவிக்கப்படாமல் டாக்டர் விஜயா என்பவரின் வீட்டில் வேலை செய்து கொண்டு படிக்குமாறு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். டாக்டர் விஜயாவின் வீட்டில் டாக்டரின் மகனான மார்ட்டின் என்பவர் சிறுமியான நாகநந்தினியை வீட்டு வேலைகள் செய்யச் சொல்லியும் - வீட்டு வேலைகளை முடித்து விட்டுப் பின்னர் தனது பாடங்களை படிக்க முயன்றால் கூட உனக்கெல்லாம் எதற்குப் படிப்பு என்று சொல்லியும் - அடித்துத் துன்புறுத்தி உள்ளார். இந்தக் கொடுமைகளின் உச்சமாக டாக்டரின் மகன் அந்தச் சிறுமியின் மார்பிலே சிகரட்டால் சூடு வைத்து உள்ளார். அந்த அதிர்ச்சியினாலோ என்னவோ டாக்டரின் வீட்டிலேயே வயதுக்கு வந்துள்ளார் நாகநந்தினி. அந்தத் தகவலைக் கூட அந்தப் பெண்ணின் தகப்பனிடம் யாரும் தெரிவிக்கவில்லை. அதன் பின்னர் டாக்டரின் மகனான மார்ட்டின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கின, 14 வயது மட்டுமே ஆன அந்தச் சிறுமியிடம் தனது காம இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள முனைந்துள்ளான் அந்தக் கொடியவன். ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியான நாகநந்தினியை மிரட்டி பலவந்தமாகத் தனது காமப்பசிக்கு இரையாக்கி உள்ளான் அந்த நயவஞ்சகன். பின்னர் அந்தச் சிறுமியை நடந்த இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமும் கூறக் கூடாது என்று மிரட்டி உள்ளான். அதோடு மட்டும் நிற்காமல் நாகநந்தினியைத் தனது நண்பர்களுக்கும் விருந்தாக்க முடிவு செய்து தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது நண்பர்கள் 15 பேரைத் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளான். நாகநந்தினிக்கு மயக்க மருந்து கலக்கப்பட்ட பானத்தைக் கொடுத்து அந்தச் சிறுமி மயங்கிய பின்னர் ஈவு, இரக்கம், மனித நேயம் என்பதெல்லாம் சிறிதும் இன்றி அந்தப் பச்சிளம் சிறுமியை வேட்டையாடி உள்ளன அந்தப் பதினைந்து மனித மிருகங்களும். உரிய பருவம் அடையாத 14 வயது சிறுமியை பதினைந்து பேர் சேர்ந்து வேட்டையாடிய இக்தகைய கொடூரச் செயலை விலங்குகள் கூட ஒருபோதும் செய்யாது. இந்த கொடூரர்களை விட விலங்குகள் எவ்வளவோ மேல் இல்லையா? தனது பெண்ணிற்கு இழைக்கப்பட்ட இக்தகைய கொடூரமான பாதகத்தைப் பற்றி அந்தத் தேவாலயத்தில் முறையிட்டு உள்ளார் அந்த ஏழைத் தந்தை சுந்தரராஜன். ஆனால் அங்கிருந்தவர்களும் அவருக்கு உதவ முன்வராமல் அந்தக் கொடூரச் செயலைச் செய்த மார்ட்டின் குடும்பத்திற்கே சாதகமாகப் பேசியதாகக் கூறுகிறார் சுந்தர்ராஜன். தேவாலயத்தில் இருந்த மதபோதகரின் செயலால் மனம் உடைந்து நொந்து போனதாகக் கூறி வருத்தப் படுகிறார் சுந்தர்ராஜன். சுந்தரராஜனுக்கு ஆதரவாக நீட்சி சிறார் உரிமை அமைப்பு மற்றும் தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம் ஆகியவை களம் இறங்கி உள்ளனர். சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தக்க தண்டனை பெற்றுத் தருவார்கள் என்று நம்புவோம். ஆனால் மருந்து மாத்திரைகள் மூலம் அந்தச் சிறுமியின் உடலில் உள்ள காயங்களை ஆற்றி விடலாம், சிறுமிக்கு உதவ முன்வந்துள்ள தொண்டு நிறுவனத்தினர் உண்மையான அக்கறையுடன் இறுதி வரை போராடினால் கொடுஞ்ச்செயல் செய்த பாதகர்களுக்குத் தண்டனையும் கிடைக்கச் செய்து விடலாம், நீதி மன்றங்களும் அரசும் மனது வைத்தால் அந்தப் பணக்கார மருத்துவரான டாக்டர் விஜயாவிடம் இருந்து ஏழைத் தந்தை சுந்தர ராஜனுக்கு கணிசமான நிவாரணத் தொகையையும் பெற்றுத் தந்து விடலாம், ஆனால் தனக்கு நேர்ந்த கொடுமையால் ரணமாகிப் போன அந்தச் சிறுமியின் மனதைச் சரி செய்ய என்ன மருந்து தர முடியும்? பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் மன நிலையை கொடூரர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் சரி செய்து விடுமா? வழங்கப்படும் நிவாரணங்களும் வசூலித்துத் தரப்படும் அபராதத் தொகைகளும் அந்தப் பெண்ணின் உள் மனக் காயத்தை ஆற்றி விடுமா? இது போன்ற கொடுமையான சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் மீதான குற்றங்களை நிரூபித்துத் தண்டனைகள் பெற்றுத் தருவது எந்த அளவிற்கு முக்கியமோ அதை விட முக்கியமானது இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதே ஆகும். அப்பாவி மக்களின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு மதத்தின் பெயராலேயோ அல்லது பணத்தைக் காட்டி மயக்கியோ அல்லது அதிகார பலத்தைக் காட்டி மிரட்டியோ நிகழ்த்தப்படும், இது போன்ற கொடுமைகள் அடியோடு தடுத்து நிறுத்தப்படுவதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் தேவை என்பதை ஆராய்ந்து அவற்றை முனைப்புடன் செயல்படுத்துவதே அரசு மற்றும் சமூகத் தொண்டு நிறுவனங்களின் தலையாய கடமை...........

0 comments:

Post a Comment

சம்பவம் © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates